ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் "மரகதக்காடு.' இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார்.
அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி. மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர, காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாக படம் முழுக்கப் பயணித்துள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/8wayroad_3.jpg)
நாகரிகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரியவிரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றிப் படம் பேசுகிறது.
இயக்குநர் மங்களேஸ்வரன் பசுமை வழிச்சாலை மற்றும் இயற்கை அழிப்பு குறித்து தனது ஆதங்கத்தையும் கோபத்தையும் பகிர்ந்து கொண்டார்.
""வளர்ச்சி என்கிற பெயரில் இயற்கையை அழித்துவிடக்கூடாது என்கின்ற கருத்தை மையமாக வைத்தே "மரகதக்காடு' படத்தை இயக்கியுள்ளேன். பூமிக்குள் புதைந்து கிடக்கும் கனிமங்களை எடுக்கிறோம் என்கிற பெயரில் நடந்துவரும் இயற்கை அழிவைப் பற்றிதான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன்.
ஒரு காட்டை உரு வாக்குவதுதான் கஷ்டம். காட்டை நாடாக்குவது ரொம்பவே சுலபம். காட்டை அழிப்பதற்கு ஆறு மாதங்கள் போதும். இதோ இப்போது பசுமைவழிச் சாலை அமைக்கிறோம் என்கின்ற பெயரில் அதுதான் நடக்கிறது. அது பசுமைவழிச் சாலை அல்ல; பசுமை அழிப்புச் சாலை.
அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு விசுவாசமாக இல்லை.
அரசியல்வாதிகளும், அரசாங்க மும் தங்களின் பை நிரம்பினால் போதும். மக்களின் சுவாசப்பை என்ன ஆனால் என்ன? என்று ஒரு கார்ப்பரேட் நிறுவனம்போல் மாறிவருகிறது..
தண்ணீரை விற்க ஆரம்பித்த போது எந்த எதிர்ப்பையும் காட்டாமல் இருந்தோம்.. இன்று வீடுதோறும் தண்ணீர் கேன்கள். அடுத்ததாக, சென்னையில காற்று விற்பனைக்கு வந்திருக்கு.
ஆறு லிட்டர் ஆக்ஸிஜன் ரூ. 645 பிளிப்கார்டில் விற்கிறாங்க..
இப்பவும் கோபம் வரலைன்னா..
வரும் தலைமுறை நம்மை மன்னிக் காது'' என சரவெடியாக வெடித்தார் மங்களேஷ்வரன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-07/8wayroad-t_0.jpg)